விஜய்யின் பிளான் B..தளபதி 70 திரைப்படத்தில் நடிக்க போகிறாராம் விஜய்..! 

 
1

எச்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தளபதி 69. KVN தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க பாபி தியோல் வில்லனாக இப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக ஏப்ரல் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி 69 வெளியாகலாம் என தெரிகின்றது

விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகவுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாகவே இருந்தது. ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பெரும்பாலானோர் விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், அவர் அரசியலில் களமிறங்கினாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் விஜய் தன் முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக தெரியவில்லை. அவர் அவரின் முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து நடிக்கவேண்டும் என கோடானகோடி ரசிகர்களும் திரைபிரபலங்களும் கூறி வருகின்றனர்

பிரபல நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் விஜய்யின் 70 ஆவது படத்தை பற்றி பேசியிருக்கிறார். அதாவது விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி அரசியலில் இருந்துகொண்டே சற்று கேப் கிடைக்கும்போது ஒரு படத்தில் நடிக்கலாம் என விஜய் நினைத்து வருவதாக தான் கேள்விப்பட்டதாகவும் சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார். தன்னை வைத்து GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவிடம் ஒரு கதையை ரெடி செய்யும்படி விஜய் கூறியிருப்பதாகவும், ஒருவேளை தளபதி 70 திரைப்படம் நடந்தால் அதை வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என தான் கேள்விப்பட்டதாகவும் கூறினார் சித்ரா லக்ஷ்மணன். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From Around the web