பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய விஜய் பட  நடிகை..!

 
1

தமிழில் ராஜ்கிரண் ஜோடியாக எல்லாமே என் ராசாதான் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா.இவர் பின் விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் தொடர்ந்து படங்கள் அதிகம் நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் ஒளிப்பதிவாளர் சரவணனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

அதன்பின் 14 வருடங்கள் நடிக்காமல் இருந்தவர் 2014ம் ஆண்டு நகரவர்த்தி நடுவில் நான் என்கிற படத்தில் நடித்தார்.அதன் மூலம் இவர் கம்பேக் கொடுத்தார்…

தற்போது நடிகை சங்கீதா 9 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சாவேர் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்…நாளை செப்டம்பர் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறதாம். அதனால் இவரின் அடுத்த இன்னிங்ஸ் என எல்லாரும் சொல்லி வருகின்றனர்..

1

.

From Around the web