‘தி கோட்’ படத்தின் அப்டேட் : ஐமேக்ஸில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’!
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். அதன்படி, தி கோட் படத்தை ஐமேக்ஸ் திரையிலும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.