அஜித்தின் வலிமை படத்தில் விகேஷ் சிவன்..?

 
விக்னேஷ் சிவன்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழில் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குநராக கால்பதித்தவர் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படம் முன்னணி இயக்குநராக தமிழில் சினிமாவில் இவருக்கு அடையாளம் வழங்கியது.

திரைப்பட இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பாடலாசிரியராகவும் உள்ளார் விக்னேஷ். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான ‘விஐபி’ படத்தில் ஒரே சிறிய கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடித்து கவனமீர்த்துள்ளார்.

மேலும் அவர் இயக்கிய படங்கள் உள்ளிட்ட மற்ற இயக்குநர்களின் படங்களில் பாடலாசிரியராகவும் விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளார். இவர் எழுத்தில் வெளியான சில பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்திலும் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள விபரம் தெரியவந்துள்ளது. இதை பட தரப்பில் இருந்து யாரும் உறுதிசெய்யவில்லை என்றாலும், விரைவில் இதுகுறித்து விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ’கிவ்ட் பண்ணுடா’ என்கிற பாடல் ரசிகர்களிடையே பிரபலமானது கவனிக்கத்தக்கது.
 

From Around the web