கமல் பிறந்தநாளுக்கு அட்வான்ஸாக ஆச்சரியம் அளித்த விக்ரம் படக்குழு..!

 
விக்ரம் படத்தில் கமல்ஹாசன்

விரைவில் கமல்ஹாசன் தன்னுடைய 67-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு விக்ரம் படக்குழு கமல்ஹாசனின் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தை நடித்து தயாரித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஷிவானி, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 


இந்த படத்தின் பட்பபிடிப்பு பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web