அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் விக்ரம் படக்குழு..!

 
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. அப்போது கமல்ஹாசன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் விஜய் சேதுபதியும் கமலும் சேர்ந்து நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.

அதை தொடர்ந்து அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. புஷ்பா படத்தின் முடித்துகொண்ட ஃபகத் சென்னையில் நடந்த விக்ரம் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசனுடன் அவர் சேர்ந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. அதை தொடர்ந்து விரைவில் 3-ம் கட்ட பணிகள் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்போது கமல்ஹாசன், ஃபகத்துடன் விஜய் சேதுபதியும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web