மீண்டும் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விக்ரம் படக்குழு..!

 
மீண்டும் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விக்ரம் படக்குழு..!

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 232-வது படமாக தயாராகவுள்ளது ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை கமல் தன்னுடைய சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படக்குழு மீண்டும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அவரிடம் இருந்து நேர்மறையான பதிலே கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

From Around the web