ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க தியேட்டருக்கு காரில் வந்து ஆட்டோவில் சென்ற விக்ரம்: ஏன் தெரியுமா?

வீர தீர சூரன் படம் சிக்கல் தீர்ந்து ஒரு வழியாக நேற்று மாலை ரிலீஸானது. இதையடுத்து தான் காளியாக நடித்த வீர தீர சூரனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க சத்யம் தியேட்டருக்கு சென்றார் விக்ரம்.
சீயானை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். கூட்டம் கூடிவிட்டதால் அவரால் காருக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டார். காலையில் ரிலீஸாக வேண்டிய படம் மாலையில் வந்தபோதிலும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் குறையவே இல்லை.
அந்த நேரத்தில் விக்ரமை பார்த்ததும் சந்தோஷத்தில் அவரை சுற்றி வளைத்துவிட்டார்கள். இதையடுத்தே கார் இருந்த பகுதி வரை செல்ல முடியாமல் ஆட்டோவில் கிளம்பினார் சீயான். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அதை பார்த்த பிற நடிகர்களின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
விக்ரம் மீது தான் அவரின் ரசிகர்களுக்கு எவ்வளவு பாசம். இந்த வரவேற்புக்கு தகுதியானவர் சீயான். உங்களின் வீர தீர சூரன் படம் வசூலில் புது சாதனை படைக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
வீர தீர சூரன் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் சத்யம் தியேட்டருக்கு வந்தார் சிவகார்த்திகேயன். பராசக்தி கெட்டப்பில் இருந்த சிவகார்த்திகேயனை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். படத்தின் இடைவேளையின்போது விக்ரமும், சிவகார்த்திகேயனும் பேசி, ஹக் செய்ததை பார்த்த ரசிகர்கள் அடைந்த சந்தோஷத்தில் அளவே இல்லை.
வீர தீர சூரன் வருமா,வராதா என டென்ஷனில் இருந்த ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்கள். வீர தீர சூரன் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என விக்ரம் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.
#ChiyaanVikram being showered with love by fans at Sathyam! From arriving in a car to leaving in an auto, The response for #VeeraDheeraSooran is massive and heartwarming! 💥 @chiyaan pic.twitter.com/qi8b43sjTl
— Yuvraaj (@proyuvraaj) March 28, 2025