ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்..?? இது வேறலெவல் அப்டேட்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் திரையுலகை ஆச்சரியமடையச் செய்துள்ளன.
 
 
rajinikanth and vikram

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய  படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ’ஜெயிலர்’ படத்தை நெல்சனும் ’லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இயக்கி வருகின்றனர். அந்த படங்களில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார்.

இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி தலைவர் 170 படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கவுள்லார்.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், தலைவர் 170 படத்தில் விக்ரமை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதையை விக்ரமுக்கு கூறியுள்ளதாகவும் அவருக்கு ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

gnanavel

ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு இணையான வெயிட்டேஜ் விக்ரமின் கதாபாத்திரத்துக்கும் இருக்குமாம். அதற்காக லைகா நிறுவனம் அவருக்கு ஒரே பேமண்டில் ரூ. 50 கோடி வரை ஊதியம் தர முடிவு செய்துள்ளது. அதனால் விக்ரமும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். 
 

From Around the web