ஒரே ஒருவரை ஃபாலோ செய்யும் விக்ரம்: அவர் யார் தெரியுமா?

 
1

பிற பிரபலங்களை போன்றே சீயான் விக்ரமும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். கணக்கு வைத்திருப்பது மட்டும் அல்ல அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்கள், பட போஸ்டர்களை போஸ்ட் செய்து வருகிறார்.

சீயானை 3.1 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் அவரோ தன் செல்ல மகன் த்ருவ் விக்ரமை மட்டும் தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார். விக்ரமுக்கு தன் மகன் என்றால் உயிர். அதனால் அவரை மட்டும் ஃபாலோ செய்கிறார்.

விக்ரம் மாதிரியே இன்ஸ்டாகிராமில் ஒரேயொருவரை பின்பற்றும் மற்றொரு பிரபலம் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இன்ஸ்டாகிராமில் 14.6 மில்லியன் பேர் ஐஸ்வர்யா ராயை பின்தொடர்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யாவோ தன் காதல் கணவரான நடிகர் அபிஷேக் பச்சனை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.

From Around the web