தேவர்மகன் இரண்டாம் பாகத்தில் விக்ரம்...?

 
தேவர் மகன் 2 படத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்ரம்

தேவர் மகன் இரண்டாம் பாகத்திற்கான கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதி முடித்துவிட்டதாகவும், அதை பிரபல மலையாள சினிமா இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1992-ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தேவர்மகன். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருந்த இப்படம் தேசிய விருதையும் பெற்றது. கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

அண்மையில் கமல்ஹாசன் பங்கேற்ற நேர்காணலில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான மகேஷ் நாராயணனுடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதாக கூறினார். மேலும் அவர் இயக்கும் படத்திற்கு திரைக்கதை எழுதி வருவதாகவும் நேர்காணலில் கமல் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்து தான் கமல்ஹாசன் குறிப்பிட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த படத்தை தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெளியான தேவர் மகன் படத்தின் முதல் பாகத்தையும் மலையாள சினிமா கொண்டாடும் இயக்குநரான பரதன் என்பவர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தேவர் மகன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
 

From Around the web