மிரட்டலாக வெளியான ‘விக்ரம் ரோணா’ பட டீசர்..!

 
விக்ரம் ரோனா
கிச்சா சுதீப் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள ‘விக்ரம் ரோணா’ படத்தின் டீசர் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை குவித்து வருகிறது.

பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் படங்கள் தென்னிந்திய சினிமா மீதான பார்வையையே மாற்றிவிட்டது. இரண்டு படங்களும் ஒட்டுமொத்த இந்தியாவையும் குறிவைத்து தயாரிக்கப்பட்டன. இதன்மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது.

இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து பான் இந்தியா படங்களை உருவாக்குவதில் இரண்டு திரைத்துறையினரும் கவனம் செலுத்தி வருகின்றன. கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து விரைவில் வெளிவரவுள்ள மற்றொரு பான் இந்தியா படம் விக்ரம் ரோணா.

இதில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. அதை முன்னிட்டு விக்ரம் ரோணா படத்தின் ஒரு நிமிட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.

From Around the web