கடைசியில் விக்ரம் படத்துக்கு கவுதம் மேனன் வைத்த ட்விஸ்டு..!!
 

விரைவில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமும் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது.
 
vikram

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இவற்றில் துருவ நட்சத்திரம் விக்ரம் படத்தின் அடுத்த வெளியீடாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில்  பல ஆண்டுகளாகவே ‘துருவ நட்சத்திரம்’ பட வேலைகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் தான் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ’துருவ நட்சத்திரம்- முதல் பாகம்: யுத்த காண்டம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த படம் ஒரே பாகம் கொண்ட கதையாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பார்ட்- 1, பார்ட் - 2  சிரீஸ் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், ’துருவ நட்சத்திரம்- முதல் பாகம்: யுத்த காண்டம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது துருவ நட்சத்திரம் இரு பாகங்கள் கொண்ட படங்களாக வெளிவருவது உறுதியாகியுள்ளது.
 

From Around the web