விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ்? 

 
1

கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு, ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வந்துள்ளன.

தற்போது கொரோனா 3-வது அலை பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. தியேட்டர்களில் இருக்கைகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

2

இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதில் உடன்பாடு ஏற்பட்டால் குடியரசு தினத்தில் ஓடிடியில் வெளியாகும் என்றும் தகவல் பரவி வருகிறது.

மகான் படத்தில் விக்ரமுடன், அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்ரன், வாணி போஜன் ஆகியோரும் உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களையும் நடித்து முடித்துள்ளார்.

From Around the web