ஓ.டி.டி-யில் வெளியாகும் விக்ரம், துருவ் நடித்த மகான்..!

 
மகான்

மகான் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாகும், படத்தை ரிலீஸ் செய்வதற்கான மாற்று வழி குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் விக்ரம் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘கடராம் கொண்டான்’ படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஆனால் கொரோனா காரணமாக இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை.

குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகான்’ படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. காரணம், இந்த படத்தில் அவருடன், அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பணிகள் சிறிது காலத்திற்கு முன்பாகவே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் படம் வெளிவரவில்லை. திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து டாக்டர், அண்ணாத்த போன்ற பெரும் படங்கள் வெளியிட தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மாநாடு, சலார், வலிமை போன்ற பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் வெளிவரவுள்ளன. இதனால் மகான் படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக படத்தை தயாரித்துள்ள நிறுவனம் ‘மகான்’ படத்தை ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படம் ஓ.டி.டி-யில் வெளியானது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த பேச்சுவார்த்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web