திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா..!
யூடியூபில் வில்லேஜ் குக்கிங் சேனல் என்பது மிகவும் பிரபலம் என்பதும் மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ள இந்த சேனலில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவும் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னிலையில் இந்த குழுவினர் சமைத்த உணவு குறித்த வீடியோ மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ படத்தில் இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்துள்ளனர் என்பது பலர் அறிந்ததே.
இந்த நிலையில் யூடியூப் மூலம் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் முக்கிய நபரான பெரியதம்பி என்ப என்ற பெரியவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் அவரது பேரன் சுப்பிரமணியன் வேலுச்சாமி என்பவர் இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support! pic.twitter.com/zCotVgS5w8
— Subramanian Velusamy (@vstamilan) March 28, 2024