பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மரணம்- தாமதமாக வெளியான செய்தி..!!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்த கசான் கான் மாரடைப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த தகவல் வெளியாகி அனைவரையும் சோகமடையச் செய்துள்ளது. 
 
kazhan khan

கேரளாவைச் சேர்ந்த நடிகர் கசான் கான் தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் நடித்தார். கடந்த 1992-ம் ஆண்டு வெளியான செந்தமிழ்ப்பாட்டு படத்தின் மூலம் அவர் நடிகரானார். அதை தொடர்ந்து தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வல்லரசு, முறைமாமன் போன்ற படங்கள் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றன. மலையாள சினிமாவில் 1993-ம் ஆண்டு அறிமுகமான இவர், வர்ணபகிட்டு, தி கிங், தி டான், மாயாமோகினி என பல்வேறு மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சி.ஐ.டி. மூசா’ என்கிற படம் கசான் கானுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கடைசியாக இவர் 2015-ம் ஆண்டு வெளியான லைலா ஓ லைலா என்கிற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். ஆனால் அவருடைய மரணம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது என்று பிரபல தயாரிப்பாளர் என்.எம். பாதுஷா தெரிவித்துள்ளார்.
 

From Around the web