நயன்தாராவுடன் மோதும் வில்லன் கிச்சா சுதீப்..!
 

 
நயன்தாரா மற்றும் கிச்சா சுதீப்

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடிப்பதற்கு தேசியளவில் புகழ்பெற்ற பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘நெற்றிக்கண்’. நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படும் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் வெளிவரவுள்ளது.

மேலும் ஒரு மலையாளப் படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பாப்பு எழுந்துள்ளது. 
 

From Around the web