14 வருடங்களை நிறைவு செய்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம்!!

 
1

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் அவரின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் லிஸ்டில் இப்படமும் இடம்பெறும்.

அதுமட்டுமின்றி காதலின் பிரிவையும், காதலிகான தியாகத்தையும் வெளிக்காட்டும் விதமாக, காட்சிகளுக்கு ஏற்ப ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை சிம்பு  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web