வினோதய சித்தம் படத்தில் நடித்த நடிகைக்கு பாலியல் தொல்லை..!

 
1

சென்னை ராயப்பேட்டை ஜி.பி.சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷெரின் வசித்து வருகிறார். இவர் வினோதய சித்தம் என்ற படத்தில் நடித்ததின் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி நடிகை ஷெரின் வீட்டில் இருந்த போது, அதிகாலை 4 மணிக்கு யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. இதனால் ஷெனின் யார் என்று கதவில் உள்ள கண்ணாடி வழியாக பார்த்த போது, அவரிடம் கார் ஓட்டும் கார்த்திக் என தெரியவந்தது. உடனே ஷெரின் கதவை திறந்து, இந்த நேரத்தில் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை உடனே தர வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். அதோடு இல்லாமல், டிரைவர் கார்த்திக், நடிகையிடம் உன் ரகசியங்களை நான் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகை ஷெரின் நடந்த சம்பவம் குறதி்து தனது சகோதரன் கவுரி ஜனார்த்தனனிடம் கூறி அழுதுள்ளார். உடனே அவரது சகோதரர் நடந்த சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கார் டிரைவர் கார்த்திக் நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது மட்டும் இல்லாமல், செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அண்ணாசாலை போலீசார் கார் டிரைவர் கார்த்திக் மீது கொலை மிரட்டல், பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, டிரைவர் கார்த்திக்கை தேடி வந்தனர்.

இதற்கிடையே டிரைவர் கார்த்திக் நண்பரான இளையராஜா என்பவர், கடந்த மாதம் 21ம் தேதி மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் நடிகையின் சகோதரர் கவுரி ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று, தனது நண்பன் மீது புகார் அளிப்பியா எனறு தகராறு செய்து, அவரது காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் டிரைவர் கார்த்திக் நண்பர் இளையராஜா மீது தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகையை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா ஆகியோரை பிடிக்க அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையில் விழுப்புரம் மாவட்டம் கானத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளையராஜாவை கடந்த மாதம் 25ம் ேததி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கார் டிரைவர் கார்த்திக் கடந்த 5ம் தேதி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் கைது ெசய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும், நடிகை ஷெரினை பாலியல் தொந்தரவு செய்து குறித்து டிரைவர் கார்த்திக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அண்ணாசாலை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

From Around the web