கமல் கட்சியில் பிரபல நடிகை ஐக்கியம்- இவுங்க பெரிய ஆளாச்சே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருந்து வரும் வினோதினி வைத்தியநாதன், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 
kamal

எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன். அதை தொடர்ந்து கடல், ஜிகர்தண்டா, ஓ காதல் கண்மணி, அப்பா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை நிறைய படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஜிகர்தண்டா படத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருக்கும் அவர், கூத்துபட்டறையில் இருந்து தனது வாழ்க்கையை துவங்கினார். அவருடைய முன்னேற்றம் என்பது படிப்படியாக அமைந்தது.

vinodhini vaidhiyanatha

சினிமாவில் நடிப்பதை கடந்து, பல்வேறு மேடை நாடகங்களிலும் அவர் நடிக்கிறார். மேலும் மேடை நாடகங்களை இயக்கியும் உள்ளார். அவ்வப்போது அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை வீடியோவாக வெளியிடும் பழக்கமும் அவரிடம் உள்ளது. அவருடைய குறிப்பிட்ட சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் வினோதினி சேர்ந்துகொண்டார். இந்த தகவலை தநது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவுடன் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

From Around the web