அம்மா சினேகாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகள்- வைரல் புகைப்படம்..!

 
மகளுடன் நடிகை சினேகா

நடிகை சினேகா மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் குழந்தையை சினேகாவுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, தன்னுடன் பல்வேறு படங்களில் நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு விஹான் என்ற மகனும் மற்றும் அத்யானந்தா என்கிற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் மகள் அத்யானந்தாவின் முதல் பிறந்தநாளை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அப்போது தான் முதன்முதலாக பலரும் சினேகின் மகளின் முகத்தை பார்த்தனர்.

அதை தொடர்ந்து மகளை சினேகாவுடன் ஒப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில் மகள் அதியானந்தா சினேகாவை அப்படியே உரித்து வைத்துள்ளார். வளரும் போது சினேகாவை விடவும் அழகாக இருப்பார் என்று பாராட்டியுள்ளனர்.

From Around the web