பெண்ணின் தொடையில் முத்தம் கொடுத்த பிரபல இயக்குநர்- வைரல் புகைப்படம்..!

 
ராம்கோபால் வர்மா

ஏற்கனவே சர்ச்சை மிகுந்த படங்களை எடுப்பதில் தனித்த அடையாளம் பதித்த பிரபல இயக்குநர், நடிகையின் தொடையில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் இந்தி திரைத்துறைகளில் பல்வேறு படங்களை இயக்கிய முன்னணி இயக்குநராக உயர்ந்தார். அதை தொடர்ந்து சர்ச்சை மிகுந்த படங்களை உருவாக்கி தற்போது தனது புகழை இழந்து வருகிறார்.

சூர்யா, விவேக் ஓபராய், ப்ரியாமணி, ராதிகா ஆப்தே ஆகியோருடைய நடிப்பில் இவர் இயக்கிய ரத்த சரித்திரம் படம் ஓரளவுக்கு ஓடியது. ஆனால் அதை தொடர்ந்து ராம் கோபால் வர்மா இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றனர்.


இந்நிலையில் சர்ச்சைக்குரிய இயக்குநராக அடையாளப்படுத்தப்பட்டும் ராம் கோபால் வர்மா, நடிகையில் தொடைக்கு முத்தம் தருவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை சமூகவலைதளங்களில் அவரே ஷேர் செய்துள்ளார்.

இதனால் கடும் சர்ச்சையை இந்த புகைப்படம் ஏற்படுத்தியுள்ளது. ராம் கோபால் வர்மா எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

From Around the web