மீண்டும் உடல் எடை கூடிய ஜோதிகா- இணையத்தில் வைரலான புகைப்படம்..!

 
ஜோதிகா மற்றும் சூர்யா

நடிகை ஜோதிகாவின் சமீபத்திய புகைப்படத்தில் அவர் உடல் எடை கூடி காணப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்தவுடன் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி என வரிசையாக படங்களில் நடித்தார். இதில் பல படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.

சினிமாவை விட்டு விலகும் போது எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். குடும்பத் தலைவியான பின்பும் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

 கொரோனா காலகட்டத்தில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஜோதிகா ஒப்புக்கொண்ட படங்களுக்கான பணிகளும் துவங்கவில்லை. இரண்டாண்டுகளாக அவரும் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை இந்தியிலும் நடிகர் சூர்யாவே தயாரிக்கிறார். இதற்காக நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் நடிகை ஜோதிகா உடல் எடை கூடியபடி காணப்படுகிறார். அவர் மீண்டும் பழைய உடல்வாகுக்கு மாற வேண்டும் என ரசிகர்கள் ஆவல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web