ஆண் குழந்தை பிறந்ததை அறிவித்த விராத் - அனுஷ்கா தம்பதி..! 

 
1

அனுஷ்கா-விராத் ஆகியோருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் அனுஷ்கா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகின. 

அனுஷ்கா சர்மாவும் அவரது கணவர் விராட் கோலியும் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று செய்திகள் வந்தன. பிப்ரவரி 3, 2024 அன்று, கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார், விராட் தனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதால் ஓய்வில் இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் அனுஷ்கா மற்றும் விராத் ரசிகர்களுக்காக ஒரு குட் நியூஸை கூறியுள்ளனர்.

மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த எங்கள் இதயங்களுடனும், பிப்ரவரி 15 அன்று, எங்கள் ஆண் குழந்தை அகாய் பிறந்தார்.வாமிகாவின் சிறிய சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.அன்பு,நன்றியுணர்வு. விராட்-அனுஷ்கா என குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளனர்.

From Around the web