9 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட் இயக்குநருடன் இணையும் விஷால்..!!

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகும் அவருடைய 34-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார்.
 
vishal

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் நடிகராக மாறிவிட்டார் விஷால். அவருடைய நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருகின்றன. மேலும், அவருடன் சேர்ந்து புதிய படங்களை கமிட் செய்வதற்கும் தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர்.

இப்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஹிட் இயக்குநர் ஹரியுடன் இணைகிறார். இது விஷாலின் 34-வது படமாக உருவாகவுள்ளது. ஏற்கனவே இந்த கூட்டணி தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை விஷால் 34 என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

vishal 34

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இந்த படத்துக்கான பூஜை கோலாகலமாக நடந்தது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும். 

From Around the web