கண்ணீர் விட்டுக் கதறிய விஷால் பட நடிகை..!
Jul 24, 2025, 06:05 IST

தீராத விளையாட்டு பிள்ளை மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக இருந்தவர். ஆனால், தற்போது அவர் முகநூல் வழியாக வெளியிட்ட ஒரு உருக்கமான பதிவே அவரது வாழ்க்கையின் இன்னொரு கோணத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.
தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகிறது.
அந்த காணொளியில் அவர், “என்னுடைய சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறேன். தினமும் துன்புறுத்துகிறார்கள். எனக்கு யாராவது உதவி செய்யுங்கள்." என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தாவின் காணொளியை பார்த்த பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.