விஷால் - ஹரி இணையும் படத்துக்கான ஷூட்டிங் துவங்குவது எப்போது?

விஷால் நடிப்பில் அண்மைக் காலமாக வெளியாகும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. இதனால் அவர் தற்போது நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். முன்னதாக வெளியான இதனுடைய டிரெய்லர், மார்க் அண்டனி ஒரு டைம் ட்ராவல் கொண்ட ஃபேண்டசி கதை என்பது தெரியவந்துள்ளது.
இதனுடைய வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. எனினும் விஷால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் தாமிரபரணி மற்றும் பூஜை படங்களை தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஷால் நடிக்கவுள்ளார்.
இன்னும் இந்த படத்துக்கான தலைப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரும் ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் படத்துக்கான ஷூட்டிங் நடைபெறவுள்ளது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் தொடப்ரான விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.