விஷால், ஆர்யாவின் எனிமி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

 
எனிமி திரைப்படம்

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகியுள்ள எனிமி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஷால், ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘எனிமி’. இருமுகன் மூலம் கவனமீர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் கதாநாயகிகளாக நடித்துள்ளார்.

அதிரடி கமர்ஷியல் கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கான புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

தற்போது இதனுடைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் எனிமி படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web