கொளுத்திப் போட்ட விஷால்..! பாய்ஸை Bad Touch பண்ணுறா சௌந்தர்யா..!
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரபல ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது 15 போட்டியாளர்களுடன் நகர்த்தப்பட்டு வருகின்றது. அதிலும் இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அன்ஷிதா எலிமினேடாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் தீபாவளி தினம் என்பதால் எலிமினேஷன் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஆள் மாறாட்டம் என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் சகப் போட்டியாளர்களை போல வேடமிட்டு உடை, நடை, பாவனை என அனைத்திலும் அவர்களைப் போலவே மாறி சிறப்பாக தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றார்கள் போட்டியாளர்கள்.
எனினும் இந்த டாஸ்க்கினால் பல சர்ச்சைகள், பிரச்சனைகள் வெடித்தது. இருந்தாலும் அவையெல்லாம் தீபாவளி கொண்டாட்டத்தோடு புஸ்வானமாக போனது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யா பற்றி விஷால் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் சௌந்தர்யா பாய்ஸை பேட் டச் பண்ணுகின்றார். ரஞ்சித் மீது காலை நீட்டி ஜெஃப்ரி மேல் ஒரு மாதிரி சாய்ந்து இருந்தார் என்று விஷால் பேசிய வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
ஆனாலும் அவர் பிக் பாஸ் வீட்டில் எல்லாரிடமும் சகஜமாக பழகுவது போல தான் தெரிகிறது என்று வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். தற்போது பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய விஷாலை என்ன செய்யப் போகின்றார் மக்கள் செல்வன் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.