இணையத்தில் வெளியாகும் விஷால் நடிப்பில் உருவான ‘ரத்னம்’ படத்தின் ட்ரைலர்..! 

 
1

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால்.இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாக உள்ளனர் .

நீண்ட நெடு நாட்களுக்கு பின் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் டூப்பர் வெற்றி படத்தை கொடுத்த விஷால் தற்போது தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கைகோர்த்துள்ளார் .

ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் கனல்கண்ணனை இப்படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் ஹரி .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

From Around the web