கமலிடம் கதை சொன்ன விஷ்ணு விஜய்..!

 
1

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடு என்பதால், புதுசு ட்விஸ்ட்களும் புது விளையாட்டுகளும் இருக்க போகிறது. அதனால் நிச்சயமாக ஸ்வாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி, அக்‌ஷ்யா, ஜோவிகா, ஆக்‌ஷயா, ஆகியோர் சென்று இருக்கின்றனர். விஷ்ணு 11 ஆவது போட்டியாளராக, நுழைந்து இருக்கிறார். யார் இந்த விஷ்ணு என பார்க்கலாம். விஜய் டிவி ரசிகர்களுக்கு, நடிகர் விஷ்ணு பரிச்சயமான முகம். கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார் .

ஆனால் ஆபிஸ் சீரியல் நடித்த விஷ்ணு கதாபாத்திரம் அவருக்கு தமிழில் பெரிய பிரேக் கொடுத்தது. பின்னர் சத்யா சீசன் 1, 2 யில் நடித்தார். பல முறை இதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைப்பட இவர், இந்த முறை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேடையில் அவர் பேசுகையில், “நான் தமிழ் பையன். எனக்கு நடிக்க ஆசை. சிதப்பா தான் எனக்கு எல்லாம். அவருக்கு ஒரு மகன் போன்று தான் நான். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நான் வெல்ல வேண்டும் என்ற கனவு. ஐந்து வருட கனவு தான் எனக்கு இந்த நிகழ்ச்சி. இதில் நான் வெற்றிப் பெற்றேன் என்றால் அவர் மேல் இருந்து என்னை ஆசிர்வாதம் செய்கிறார் என நினைத்து கொள்வேன்” என்றார்.

From Around the web