கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம்..!

 
கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கை ஜூவாலா கட்டா ஆகியோருக்கு கோலாகமலாக திருமணம் நடைபெற்றது.

வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் அறிமுகமாகி ராட்சசன் படம் வாயிலாக தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை பதித்தவர் விஷ்ணு விஷால். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரமேஷ் குடவாலாவின் மகனான இவருக்கும், நடிகர் ரஜினிகாந்திடம் நீண்ட நாட்களாக மேலாளராக இருந்து கே. நடராஜனின் மகள் ரஜினி என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிவதாக கூறி விவகாரத்து பெற்றனர். அதை தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வந்தார் விஷ்ணு விஷால். அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதை விஷ்ணு விஷால் உறுதி செய்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதை தொடர்ந்து இன்று விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டாவின் திருமணம் ஹைதராபாத்தில் தெலுங்கு முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

புதியதாக இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ள இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதை தொடர்ந்து அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

From Around the web