விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு..!

 
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு..!

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் தனக்கு நடக்கவிருக்கும் திருமண தேதி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், ரஜினி நட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆர்யன் என்கிற 4 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

அதை தொடர்ந்து பரஸ்பர சம்மதம் அடிப்படையில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ரஜினி நட்ராஜ் இருவரும் விவகாரத்து பெற்றனர். பிறகு விஷணு விஷால் ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பதிவேற்றினர். ஆனால் தங்களுக்கு இடையே இருக்கும் உறவு குறித்து யாரும் மனம் திறக்கவில்லை. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஜூவாலா கட்டாவை காதலிக்கும் தகவலை அவர் வெளியிட்டார்.


சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான் காடன் படம் தெலுங்கிலும் வெளியானது. இதற்கான விளம்பர பணிகளுக்காக அவர் ஹைதராபாத் சென்றிருந்த போது, ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவுள்ள செய்தியை  உறுதி செய்தார். அதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.

தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், வரும் ஏப்ரல் 22-ம் தேதி தனக்கும் ஜூவாலா கட்டாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மணமக்களுக்கு அவர்கள்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் உட்பட ரசிகர்களும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். 

From Around the web