ஜியோ சினிமாவில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்...!!

 
1

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிய படம் மோகன்தாஸ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பறிவ் சகோதர்கள் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் வடிவமைப்பாளர்களான இணைந்துள்ளனர். இவர்களுடன் பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படு த்ரில்லிங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஓடிடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 


 


 

From Around the web