அடுத்த படத்துக்காக தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையும் விஷ்ணு விஷால்!!

 
1

விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடித்து வந்தார் விஷ்ணு விஷால். முரளி கார்த்திக் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்துக்காக தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையவுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாஸ் மகாராஜா ரவி தேஜா சாருடன்... அற்புதமான கூட்டணியுடன் ஆண்டைத் தொடங்குகிறேன். ஒரு சூப்பர் பாசிட்டிவ் நடிகர் மற்றும் மிகச்சிறந்த மனிதர். எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர். அதிகாரபூர்வ விவரங்கள் விரைவில். ஆனால், இப்போது பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டிய நேரம்.” என்று கூறியுள்ளார்.


 

From Around the web