ஓ.டி.டி-யில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்..!

 
எஃப்.ஐ.ஆர் திரைப்படம்

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும் ரைஸா வில்சன், ரேபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெலும் இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்த படத்தில் அபு பக்கர் அப்துல்லா என்கிற கதாபாத்திரத்தில் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் குற்றவாளியாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். அவருடைய வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக கவுதம் மேனன் நடித்துள்ளார். 

முன்னதாக இந்த படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதய கொரோனா சூழல் காரணமாக படத்தின் வெளியீடு ஓ.டி.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவுரவ் நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். அருண் வின்செண்ட் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜி.கே மேற்கொண்டுள்ளார். படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 
 

From Around the web