திருமணமான ஒரே மாதத்தில் விவகாரத்து பெறும் சின்னத்திரை ஜோடி..!!

திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்கள் விவகாரத்து பெற முடிவு செய்துள்ளது சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
vishnukanth

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ’சிப்பிக்குள் முத்து’ என்கிற தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் நடித்து வந்த  சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட் புகைப்படங்களை பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து, இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டனர். கோலாகலமாக நடந்த திருமணத்தில் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

எனினும் திருமணமான ஒரே மாதத்தில் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்துக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது ஒவ்வொருவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, திருமணமான புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் விவகாரத்து பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக குறிப்பிட்ட சில ஊடகங்கள் விஷ்ணுகாந்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு பதிலளித்த விஷ்ணுகாந்த், விரைவில் எல்லாமே தெரியவரும் என்று மட்டும் கூறினார், சம்யுக்தாவிடம் இருந்து விவகாரத்து பெறுவதற்கான தகவல் எதையும் அவர் உறுதிசெய்யவில்லை.
 

From Around the web