அண்ணாச்சி படத்துக்காக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் விவேக்..!

 
சரவணன் அருள் மற்றும் விவேக்

சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் பிரபல தொழிலபதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஊர்வசி ரவுதல்லா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனுடைய 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், விவேக் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார். இதனால் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவை படக்குழுவினர் அணுகியதாக சொல்லப்பட்டது.

ஆனால் யோகி பாபு வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது. விவேக் நடித்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் படக்குழு ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அவருடைய கதாபாத்திரத்தின் நீளத்தை குறைத்துள்ளனர்.

மேலும் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவேக்கின் கதாபாத்திரத்தை படத்தில் கொண்டுவந்துள்ளனர். அதற்காக அவருடைய தோற்றம் கொண்ட ஒருவர் படத்தில் நடித்து வருகிறார்.

மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, விரைவில் இறுதிக்கட்ட பணிகள் துவங்கும் என தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து படத்தின் வெளியீடு தொடர்பாகவும், டைட்டிலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web