தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக்; கொரோனாவில் இருந்து மீண்ட சுந்தர்.சி..!

 
தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக்; கொரோனாவில் இருந்து மீண்ட சுந்தர்.சி..!

நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனாவுக்காக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி கோவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முந்தைய அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். அதன் பின் பேசிய அவர், ‘பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி, பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்னும் ஒருவாரம் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடிகை குஷ்பு அரசியல் பணிகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.
 

From Around the web