மூத்த மகளின் திருமணத்தை முடிபதற்குள் இப்படி ஆகிவிட்டதே- விவேக் குடும்பத்தார் வருத்தம்..!

 
மூத்த மகளின் திருமணத்தை முடிபதற்குள் இப்படி ஆகிவிட்டதே- விவேக் குடும்பத்தார் வருத்தம்..!

நடிகர் விவேக் தன்னுடைய மூத்த மகள் திருமணம் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்த 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். அவருடைய திடீர் மறைவு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் பெரிதும் பாதித்துள்ளது. 

இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த கடைசிப் பேட்டியில் மகளின் திருமணம் பற்றி விவேக் பேசியுள்ளது சமூவலைதலங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவும் குடும்பமும் வேறு. அதை எப்போதும் ஒன்றாக பார்த்தது கிடையாது. கட்டிட கலை நிபுணராக பணியாற்றி வரும் மூத்த மகள் அமிர்தநந்தினிக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம். 

இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இரண்டு மகள்களுக்கும் சினிமாவில் நாட்டம் கிடிஅயாது. அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் என்று அந்த நேர்காணலின் போது நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கண்கலங்குகின்றனர். 
 

From Around the web