பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் இன்னொரு ஹீரோ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 சீசன்களாக ஒளிபரப்பான பிக்பாஸில், பலதரப்பட்ட பிரபலங்கள் மற்றும் புதிய அறிமுகங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒருசிலர் மட்டுமே மக்களால் பெரியளவில் அங்கிகரீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் கவின், வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் சாண்டி, சனம் ஷெட்டி, ஓவியா, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் போன்றோரு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்களில் சினிமாவில் கால்பதித்து பெரியளவுக்கு வந்துகொண்டிருக்கும் நடிகர்களும் அடங்குவர்.
அந்த வரிசையில் சமீபத்திய பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற பிரபலம், சினிமாவில் ஹீரோவாக கால்பதிக்கிறார். பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற வி.ஜே. கதிரவனுக்கு நல்ல ரசிகர் வட்டம் உள்ளது. குறிப்பாக ஷிவினுக்கு அவர் மீது விருப்பம் இருப்பதாக கூறி, உருவாக்கப்பட்ட மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் கதிரவனுக்கு மேலும் புகழை பெற்று தந்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கதிரவன் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அவர் ஜோயல் விஜய் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. அந்த படத்துக்கு ‘கூடு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது படத்துக்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருவதாகவும், விரைவில் வெளியீடு தொடர்பான தகவல் வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.