விக்ரம் படத்தில் இணைந்த வி.ஜே மகேஸ்வரி..!

 
வி.ஜே. மகேஸ்வரி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் வி.ஜே மகேஸ்வரி நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு வெள்ளித்திரை நட்சத்திரங்களுடன் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

அதன்படி பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, மைனா நந்தினி ஆகியோர் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். அந்த வரிசையில் பிரபல வி.ஜே-வான மகேஸ்வரியும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த மூன்று சின்னத்திரை பிரபலங்களும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றனர். குறிப்பாக இவர்களுடைய கதாபாத்திரங்கள்  விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஜோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web