விவாகரத்து குறித்து பேசிய வி.ஜே.மகேஸ்வரி... என் கணவர் உடல் ரீதியா தொல்லை கொடுத்ததால்...
சென்னையில் பிறந்து வளர்ந்த மகேஷ்வரி, சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து சன்டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைவரின் பேவரைட் தொகுப்பாளிணியாக மாறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர். பல முன்னணி சேனல்களில், விஜேவாகவும், சீரியல்களிலும் நடித்து வந்தார். இதையடுத்து, திருமணம் செய்து கொண்ட விஜே மகேஷ்வரி, குடும்பத்தினர் வற்புறுத்தலால் மீடியாவை விட்டு விலகினார். ஆண் குழந்தைக்கு தாயான மகேஷ்வரி கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
அண்மையில், விவாகரத்து குறித்து பேட்டி அளித்துள்ள இவர், தன் கணவர் வீட்டில் தன்னை மிகவும் அடிமை வைத்து இருந்தார்கள். நண்பர்களுடன் பழக கூடாது, எந்த ஆண்களுடனும் நடிக்க கூடாது, இதனால், வெறும் விஜேவாக மட்டும் தான் இருந்தேன். அப்பாடி மீறி சீரியல்களில் நடித்தால் குடும்பத்து மானம் போய்விடும் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன். என் அம்மாவிற்கு சிறு உதவிகள் கூட செய்யக்கூடாது என்று கூறினார். ஒரு கட்டத்தில் அம்மாவிற்கு காசு கொடுக்க கூட விடவில்லை. இனி மேல் பணம் கொடுத்தால், அங்கேயே போய்டுனு சொல்லுவார். இதனால் தான் அம்மா வீட்டு வேளைக்கு செல்ல முடிவு எடுத்தார்கள். இத்தனை வருடங்கள் என்னை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை நான் எப்படி வீடு வேலைக்கு அனுப்ப முடியும், இதுவே, அவங்க அம்மாவை அப்படி செய்ய விட்டுவிடுவார்களா? இருந்தாலும், பெருமையாக இருந்தேன். ஆனால், நாளுக்கு நாள் என் கணவர் உடல் ரீதியாக, மன ரீதியாக பல தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், என் கணவர் என்னை சந்தேகப்பட்டார். இதற்குமேல் பெருமையாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறேன். இப்போ நான், என் மகன், என் அம்மா அனைவரும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.