OTTயில் வெளியாக 8 வாரம் காத்திருங்கள்..! –கமல்ஹாசன்

 
1

பிரபல இயக்குநர் மணிரத்தினம் இயக்கியதுடன், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘தக் லைஃப்’. 

இந்தப் படம் வரும் ஜூன் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதிக்கப்படும் என கமல்ஹாசன் தற்பொழுது புரொமோஷன் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் கமல்ஹாசன் உருக்கமாக விளக்கியுள்ளார்.

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்டது. அதனை ஒரு நாள் கழித்து பார்க்கும் போது, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மும்பையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், மீடியா முன் உரையாற்றிய போது, “தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகு தான் ஓடிடியில் படம் வெளியிடப்படும்.” என்று கூறியிருந்தார்.

இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது ஒரு சோதனை முயற்சி அல்ல. நன்கு ஆலோசித்து எடுத்த முடிவு. இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு என்றும் தெரிவித்திருந்தார். 

பொதுவாகவே, திரையரங்கில் படம் ரிலீஸ் ஆன பிறகு, 3 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியாகி விடுகிறது. இது திரையரங்க வருகையை தாக்குகிறது எனப் பலரும் வாதாடியுள்ளனர். ஆனால் ‘தக் லைஃப்’ படக்குழு எடுத்துள்ள இந்த முடிவு, திரையரங்கத்தை முதன்மை களமாக வைத்திருப்பதாக இருக்கிறது.

From Around the web