பாக்கியா கொடுத்த வார்னிங்... நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த கோபி..!

 
1

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த  வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

அதில், கோபி பாக்கியாவுக்கு டீ ஊற்றி கொடுக்கிறார். இதை வாங்கிய பாக்கியா அதனை கிச்சனில் கொண்டு போய் ஊத்தி விடுகிறார்.

அதன்பின் கோபி வீட்டில் உள்ள எல்லாருடனும் சிரித்து பேசி சந்தோசமாக இருக்க, அங்கு சென்ற பாக்கியா உங்களை வீட்டை விட்டு போக சொன்னேன்.. எப்ப போக போறீங்க என்று கேட்கிறார்.

இதை கேட்ட கோபி, பாக்கியா சொல்லுவது சரி தான் நான் வீட்டை விட்டு போவது தான் சரி தான் என போக வெளிக்கிட, அந்த நேரத்தில் கோபிக்கு திடீரென மீண்டும் நெஞ்சுவலி வருகிறது.

இதன் போது கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிய, டாக்டர் வந்து கோபியை செக் பண்ணிவிட்டு போகிறார். அதன்பிறகு ஈஸ்வரி பாக்கியாவிடம் கையெடுத்து கும்பிட்டு இனிமேல் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லாதே.. எனக்கு இருக்கிற ஒரே ஒரு பிள்ளை அவனுக்கு ஏதும்னா நான் இருக்க மாட்டேன் என அழுது புலம்புகிறார்.

இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே இனிமேல் பாக்கியா கோபியை வெளியே போக சொல்ல மாட்டார். இதனால் ராதிகா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

From Around the web