திரையரங்கில் பட்டையை கிளப்பும் ப்ளூ ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவரா ?
ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .
மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அசோக் செல்வன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்ததே கவின் தான் என கூறப்படுகிறது .
ஸ்டார் படத்தில் பிஸியாக இருப்பதால் கவினால் நடிக்க முடியாமல் போனதாகவும் இதனால் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் இந்த கதாபாத்திரதிக்ரு சரியாக இருப்பார் என்று கூறியதால் அசோக் செல்வனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .