முதன் முதலில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்க இருந்தது இந்த நடிகரா ? 

 
1

சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக கோமதி பிரியா நடித்த வருகிறார். அவருக்கு ஜோடியாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆகி வருகிறது. சாதாரணமாக வீட்டில் நடக்கும் சம்பவங்களை எடுத்துக்காட்டும் விதமாகவும் மாமியார் மருமகளுக்கு இடையிலான சண்டை ,காமெடி, கொடுமை, பிடிவாதம் ஆகியவற்றை விறுவிறுப்பாக எடுத்துக்காட்டும் தொடராகவும் இந்த சீரியல் காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த், தனது இயல்பான நடிப்பின் மூலம் அநேகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவருக்கு வெளியில் போகும்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் அண்மையில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடிக்க இருந்தது நடிகர் நவீன் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் நவீன். இந்தத் தொடர் வெற்றிகரமாக இரண்டு பாகங்களை கடந்துள்ளது. மேலும் நடிகர் நவீன் அண்மையில் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் முடித்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில்  வெற்றி வசந்தத்துக்கு முதல் நடிகர் நவீன் தான் 'முத்து' கேரக்டருக்கு நடிக்க கேட்கப்பட்டதாகவும், அதனை அவர் மறுத்து விட்ட நிலையில் அந்த வாய்ப்பை வெற்றி வசந்த் தட்டிச் சென்றார்  எனவும் தற்போது கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போது நடிகர் நவீன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னமருமகள் சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1

From Around the web