தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகையா..?

 
தனுஷ் மற்றும் சேகர் கம்மூலா
பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதற்கு காரணமாக இருந்தவர் பிரபல நடிகை ஒருவர் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் தனுஷ், கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என இருவேறு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார். தன்னுடைய சிறந்த நடிப்புக்காக இரண்டு முறை தேசிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும் பிற மொழிப் படங்களிலும் தனுஷ் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வரிசையில் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் அவர் கால்பதிக்கவுள்ளார். அந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் சேகர் கம்மூலா இயக்குகிறார்.

இந்நிலையில் தனுஷ் தெலுங்குப் படத்தில் நடிக்க காரணமாக இருந்தவர் சாய் பல்லவி என்கிற விபரம் தெரியவந்துள்ளது. சேகர் கம்மூலா இயக்கியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் தற்போது சாய் பல்லவி நடித்து முடித்துள்ளார். அப்போது தனுஷிடம் தனக்கு இருந்த நட்பை பயன்படுத்தி சேகர் கம்மூலாவிடம் அவரை பேச வைத்துள்ளார்.

இதன்மூலம் அவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. எனினும் இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் அடுத்த வருடம் தான் தொடங்குகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web