நண்பன் படத்தில் சைலன்சராக முதலில் நடிக்கவிருந்தது இந்த சூப்பர் ஸ்டார் நடிகரா..?
விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ படத்தில் இடம்பெற்ற சைலன்சர் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்த விபரங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘நண்பன்’. ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான முதல் படமும் இதுதான். அதனால் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஏகோபித்த ஆதரவு கொடுத்தனர்.
தற்போது டிவியில் போட்டாலும் பலரும் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு நண்பன் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த படத்தில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தனர்.
கதாநாயகியாக இலியானா நடித்திருந்தார். அதை தொடர்ந்து பாலிவுட் சினிமாவுக்கு சென்றவர் தான். அதற்கு பிறகு தென்னகத்தை கண்டுக்கொள்ளவே இல்லை. தற்போது அங்கும் பட வாய்ப்புகள் போயி, தெலுங்கிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் நண்பன் படத்தை பார்த்த அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற கதாபாத்திரம் சைலன்சர். ஸ்ரீவஸ்தன் என இயற்பெயர் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் சத்யன் நடித்து அசத்தி இருந்தார். ஆனால் இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும், பல்வேறு திறமை கொண்டவருமான திலீப் தான் முதலில் சைலன்சர் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களாக் அவர் நண்பன் படத்தில் நடிக்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
 - cini express.jpg)